Posts

பத்ர் தரும் படிப்பினை - மஷுரா

Image
 பத்ர் தரும் படிப்பினை 2 மஷுரா மார்க்க விவகாரங்களில் ஆலிம்களுடனும், உலக விவகாரங்களில் குறித்த துறையில் ஆற்றல் உள்ளவர்களிடமும் ஆலோசனைச் செய்வது அழ்ழாஹ்வின் உதவியும், உலகியல் விவகாரங்களில் நன்மை நடப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் . நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ர் யுத்தத்திற்கு முன்னர் ஸஹாபாக்களிடம் ஆலோசனைக் கேட்டார்கள். தாம் விரும்பும் முடிவை சில ஸஹாபாக்கள் முன் வைத்தும்கூட அவர்கள் திடீர் முடிவு செய்யாது அன்ஸாரிகளின் முடிவை அறியும் ஆர்வத்தில் தொடர்ந்தும் ஆலோசனைச் செய்தார்கள். அவர்களின் ஆலோசனையும் சாதகமாக அமைந்த பின்னரே யுத்தம் செய்யும் முடிவை எடுத்தார்கள். இது ஆலோசனை செய்வதின் அவசியத்தை உணர்த்துகின்றது. மேலும் பத்ர் களத்தில் நடந்த இன்னொரு சம்பவமும் மஷுராவின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘பத்ர்’ களம் சென்று மதீனா பகுதிக்கு நேராக இருக்கும் முதலாவது கிணற்றுக்கருகில் தமது கூடாரங்களை அமைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்.  அப்போது ஹுபாப் இப்னுல் முன்தீர் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள், ‘அழ்ழாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நாம் கூடாரமிட வேண்டு...

பத்ர் தரும் படிப்பினை - 1

Image
 பத்ர் தரும் படிப்பினை 1 துஆ ஆசைப்பட்ட ஹபீப் வாயைத் திறந்து கேட்காமலேயே வெறுமனே வானத்தை அடிக்கடி பார்த்ததால் அக்ஸாவிலிருந்த கிப்லாவை கஃபாவிற்கு மாற்றிய ரப்பு பத்ரிலும் ஏதாவதொரு வகையில் கேட்காமலேயே உதவி செய்திருக்கலாம். ஆனால் அழ்ழாஹ் அவ்வாறு செய்யவில்லை! பெரும் ஒரு முயற்சிக்கு முன்னர் துஆவின் அவசியத்தை ரப்பு ஏற்படுத்தினான். ஆம்! பத்ரின் வெற்றிக்குப் பின்னால் நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணீரால் நிரம்பிய ஸுஜுத்கள், சிறு குழந்தைப் போன்று அழுது அடம்பிடித்த துஆக்கள் போன்றனவும் இருந்தன. நபிகளார் அழுததால் ஏற்பட்ட உடல் அசைவினால் அவர்களது தோலில் போட்டிருந்த போர்வை கீழே விழ, அபூபக்ர் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் அதை எடுத்து அவர்களின் தோலில் போட்டவாறு ஆறுதல் கூறியது ஹதீஸில் பதிவாகியுள்ளது. துஆக்கு பின்னரே அழ்ழாஹ் 3000/ 5000 வானவர்களை அனுப்பி வைத்தான். "ஜிப்ரீல், மீக்காஈலோடு பெரிய மலக்கான இஸ்ராஃபீலும் வந்துள்ளார்" என்றார்கள் நபிகளார். மேலும் அபூபக்ர் மற்றும் அலி ரழியழ்ழாஹு அன்ஹுமா ஆகிய இருவரிடமும், "உங்களுடன் ஒவ்வொரு மலக்குகள் உள்ளனர்" என்றார்கள். ஸஹாபாக்கள் வாளை வெறுமன...

திஹ்யதுல் கல்பி றழியழ்ழாஹு அன்ஹு

Image
  திஹ்யதுல் கல்பி றழியழ்ழாஹு அன்ஹு - மதீனாவைச் சேர்ந்தவர்கள். - அழகான தோற்றத்தைக் கொண்டவராக இருந்ததால் அழகுக்கு உதாரணம் காட்டப்பட்டவர்கள். - கைஸர் மன்னருக்கு தூதுவராக அனுப்பி வைக்கப்பட்டவர்கள். - டமாஸ்கஸ்ஸில் வசித்து வந்தார்கள். - நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உம்மு ஸலமா றழியழ்ழாஹு அன்ஹா அவர்கள் அமர்ந்திருந்தபோது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு மனிதரின் தோற்றத்தில் வந்தார்கள். மேலும், நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஸலமா றழியழ்ழாஹு அன்ஹா அவர்களிடம், 'இவர் யார்?' என்று கேட்க, அவர்கள், 'இது திஹ்யா' என்று பதிலளித்தார்கள். அப்போது அது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தாம்' என்று உம்மு ஸலமா றழியழ்ழாஹு அன்ஹா அவர்களுக்கு தெரியாது. பின்னர் உம்மு ஸலமா றழியழ்ழாஹு அன்ஹா அவர்கள், 'அழ்ழாஹ்வின் மீதாணையாக! நான், நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னதாகத் தம் உரையில் குறிப்பிட்டதைச் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா கல்பீ அவர்கள் தா...

ஹன்ழலா இப்னு அபூ ஆமிர் றழியழ்ழாஹு அன்ஹு

Image
 மலக்குமார்கள் குளிப்பாட்டிய ஹன்ழலா இப்னு அபூ ஆமிர் றழியழ்ழாஹு அன்ஹு - மதீனாவைச் சேர்ந்தவர். - "அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா" எனும் திண்ணைத் தோழர்களில் ஒருவர். - திருமணம் முடித்து அடுத்த நாளான உஹதுடைய தினத்தில் வீரதீரமாகப் போரிட்டு ஷஹீதானவர்கள். ஹன்ழலா றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் திருமணம் முடித்து, முதலிரவையும் சந்தோஷமாகக் கழித்து உறங்கிக் கொண்டிருக்கும்போது, நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஹத் போருக்கு அழைப்பு விடுக்கும் பறை ஓசையைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தார். உடலுறவுக்குப்பின் ஃபர்ழான குளிப்பைக் குளிப்பதற்கும் அவருக்கு நேரமில்லை; அவகாசமில்லை. ஃபர்ழான குளிப்பைக் குளித்தால் நேரமாகி விடும் என்பதனால் குளிக்காமலேயே கடகடவென கவசம் தரித்தார்; ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டார்; போர்களத்திற்குப் பாய்ந்தோடினார். வெற்றி வாகை சூடி விட்டு திரும்புவார்கள் என எண்ணி அவரது மனைவியும் சந்தோஷமாக வழியனுப்பிவைத்தார். ஹன்ழலா றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் களத்தில் குறிவைத்தது, குறைஷிப் படையின் தலைவன் அபூஸுஃப்யானை. படையின் தலைவன் என்பதால் அபூஸுஃப்யானைச் சுற்றி பாதுகாப்பு வளையம் பலமாய் இருந்தது. தவிர அபூஸுஃப்யான்...

ஃகப்பாப் இப்னு அரத் றழியழ்ழாஹு அன்ஹு..

Image
 ஃகப்பாப் இப்னு அரத் றழியழ்ழாஹு அன்ஹு - இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முதல் உம்மு அன்மாரின் கொல்லன் பட்டறையில் வாள் செய்து கொண்டிருந்தவர்கள். - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆறாவது நபர். "ஃகப்பாப் ஒரு காலத்தில் இஸ்லாத்தில் ஆறில் ஒரு பங்கு" என்று பெருமையாகச் சொல்லப்பட்டது. - ஃகப்பாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக கொடூரமான முறையில் வேதனைச் செய்யப்பட்டார்கள். • அடித்தார்கள்; உதைத்தார்கள். • பட்டறையில் இருந்த இரும்புச் சாமான்களை எடுத்துத் தாக்க ஃகப்பாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் சுயநினைவற்றுக் கீழே விழுந்தார்கள். • காஃபிர்கள் கற்களை நெருப்பில் இட்டுச் சுடுவார்கள். தீ கொழுந்து விட்டு எரிந்து, அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருப்பார்கள். பின்னர் ஃகப்பாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் உடைகளைக் கழற்றி விட்டு, அந்த நெருப்புக் கங்குகளின்மேல் அவர்களைப் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பார்கள். அவர்களின் முதுகு சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழும். அவர்களின் காயத்திலிருந்து வழிந்து விழும் நீரினால் அந்தத் தீ அணையும். • எஜமானி உம்மு அன்மார் பட்டறைக்க...

பூமி விழுங்கிய ஃகுபைப் இப்னு அதீ, ஆண் தேனீக்கள் பாதுகாத்த ஆஸிம் இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹுமா

Image
Click Here & Join lovislam Telegram Group பூமி விழுங்கிய ஃகுபைப் இப்னு அதீ ஆண் தேனீக்கள் பாதுகாத்த ஆஸிம் இப்னு ஸாபித்  றழியழ்ழாஹு அன்ஹுமா - இருவரும் மதீனாவைச் சேர்ந்தவர்கள் - இருவரும் "ரஜீஃ" சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள். ஹிஜ்ரி 4, ஸஃபர் மாதம் அழல் மற்றும் காரா வமிசத்தைச் சேர்ந்த ஒரு கூட்டம் நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து தங்களில் பலர் இஸ்லாத்தைத் தழுவ விரும்புகின்றனர். அவர்களுக்கு இஸ்லாமையும், குர்ஆனையும் கற்றுத்தர தங்களுடன் சிலரை அனுப்புமாறு கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று பத்து நபர்களை நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பினார்கள். குழுவுக்குத் தலைவாரக ஆஸிம் இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் இருந்தார்கள். இவர்களை அழைத்துக் கொண்டு "ரஜீஃ" என்ற இடத்தை அம்மக்கள் அடைந்தனர். இவ்விடம் ராபிக் மற்றும் ஜித்தாவிற்கு மத்தியில் ஹிஜாஸ் பகுதிக்கு அருகில் ஹுதைல் வமிசத்திற்குச் சொந்தமான நீர் நிலையாகும். இங்கு வந்தவுடன் லஹ்யான் கிளையினரை இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினர். லஹ்யான் கிளையைச் சோந்த நூறு அம்பெறியும் வீரர்கள் காலடி அடையாளங்கள...

அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா

Image
  Telegram channel 👉  Click and Join our Telegram channel அன்னையின் சிறப்புக்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழரும், அருமை நண்பருமான அபுபக்கர் (ரலி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா (ரலி) ஆவார்கள். திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அன்னையவர்களின் பொருட்டால் பல குர்ஆன் வசனங்களை இறைவன் இறக்கியருளியுள்ளான் என்ற நற்பெருக்குச் சொந்தக்காரராவார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொண்ட மனைவியர்களில், மிகச் சிறப்பு வாய்ந்தவராகவும், இன்னும் அவர்களில் அன்னையவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் அந்த சுவனச் சோலைகளில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய மனைவியாக இருப்பதற்கும் அல்லாஹ் அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். இன்னும் அன்னையவர்களின் உருவத்தை பச்சைப் பட்டுத் துணியில்  வைத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வானவர் தலைவர் ஜிப்ரில் (அலை) அவர்களால் காட்டப்பட்ட நற்பெயருக்கும் சொந்தக்காரவார்கள். இன்னும் இவரை நீங்கள் மணக்கவிருக்கின்றீர்கள், இன்னும் இவரே மறுமைநாளிலும் உங்களுக்கு மனைவியாக இருக்கப் போகின்றவர் என்றும் அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரில்...