பத்ர் தரும் படிப்பினை - 1
பத்ர் தரும் படிப்பினை 1
துஆ
ஆசைப்பட்ட ஹபீப் வாயைத் திறந்து கேட்காமலேயே வெறுமனே வானத்தை அடிக்கடி பார்த்ததால் அக்ஸாவிலிருந்த கிப்லாவை கஃபாவிற்கு மாற்றிய ரப்பு பத்ரிலும் ஏதாவதொரு வகையில் கேட்காமலேயே உதவி செய்திருக்கலாம். ஆனால் அழ்ழாஹ் அவ்வாறு செய்யவில்லை! பெரும் ஒரு முயற்சிக்கு முன்னர் துஆவின் அவசியத்தை ரப்பு ஏற்படுத்தினான்.
ஆம்! பத்ரின் வெற்றிக்குப் பின்னால் நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணீரால் நிரம்பிய ஸுஜுத்கள், சிறு குழந்தைப் போன்று அழுது அடம்பிடித்த துஆக்கள் போன்றனவும் இருந்தன. நபிகளார் அழுததால் ஏற்பட்ட உடல் அசைவினால் அவர்களது தோலில் போட்டிருந்த போர்வை கீழே விழ, அபூபக்ர் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் அதை எடுத்து அவர்களின் தோலில் போட்டவாறு ஆறுதல் கூறியது ஹதீஸில் பதிவாகியுள்ளது.
துஆக்கு பின்னரே அழ்ழாஹ் 3000/ 5000 வானவர்களை அனுப்பி வைத்தான். "ஜிப்ரீல், மீக்காஈலோடு பெரிய மலக்கான இஸ்ராஃபீலும் வந்துள்ளார்" என்றார்கள் நபிகளார். மேலும் அபூபக்ர் மற்றும் அலி ரழியழ்ழாஹு அன்ஹுமா ஆகிய இருவரிடமும், "உங்களுடன் ஒவ்வொரு மலக்குகள் உள்ளனர்" என்றார்கள்.
ஸஹாபாக்கள் வாளை வெறுமனே உருவினார்கள். எதிரிகளின் தலைகள் கீழே உருண்டன. உருவியது என்னவோ ஸஹாபாக்கள். வெட்டியதோ மலக்குகள். சுராக்காவின் உருவத்தில் இருந்த ஷைத்தான் மலக்குகளைக் கண்டவுடன், எதிரிகளிடம், "நீங்கள் பார்க்காதவற்றை நான் பார்க்கிறேன்" என்று கூறியவாறு தப்பித்து ஓடி கடலில் குதித்தான்.
ஹுனைனிலும் அவ்வாறே கண்ணுக்குத் தெரியாத படை ஒன்றை அனுப்பி வைத்தான் ரப்பு!
எந்தவொரு முயற்சிக்கு முன்னரும் துஆவை அவசியப்படுத்திக் கொள்ளுங்கள். துஆ முஃமீனின் பலமான ஆயுதமாகும். எனவே, இஃக்லாசுடன் அழ்ழாஹ்விடம் இரு கரம் ஏந்துவோமாக!
அப்து பூமியின் காதில் கிசுகிசுத்தால் ரப்பு வானிலிருந்து கேட்டுக் கொண்டிருப்பான்.
Comments
Post a Comment