ஹுதைஃபா இப்னு யமான் றழியழ்ழாஹு அன்ஹு (ஸாஹிபுஸ் ஸிர்)
கியாமத் வரை உலகில் நடக்கவிருக்கும் ஃபித்னாக்கள் பற்றி அறிந்து வைத்திருந்த
ஹுதைஃபா இப்னு யமான்
றழியழ்ழாஹு அன்ஹு
- தலைசிறந்த ஸஹாபாக்களில் ஒருவர்.
- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிக நம்பிக்கைக்குரிய ஸஹாபாக்களில் ஒருவர்.
- தனித்துவமான அறிவு, சமயோசிதம் மற்றும் இரகசியங்களைக் காக்கும் தன்மை போன்ற உயர் பண்புகளை கொண்டிருந்தவர்கள்.
- இவர்களது, இரகசியம் பேணும் குணம் காரணமாக நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இவர்களிடம் முக்கியமான இரகசியங்கள் பலவற்றை கூறியிருந்தார்கள். இதனால் இவர்கள், "ஸாஹிபுஸ் ஸிர்"- இரகசியத் தோழர் என்று அழைக்கப்பட்டார்கள்.
- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், முனாஃபிக்கீன்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை இவர்களிடம் கையளித்து முனாஃபிக்கீன்களின் செயற்பாடுகள், நடவடிக்கைகள் பற்றி கண்காணிக்கும்படி பணித்தார்கள்.
- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மக்கள் நன்மைகளைப் பற்றி வினவிக் கொண்டிருந்தபோது இவர்கள், தீமையில் இருந்து தப்பித்துக் கொள்ள தீமையைப் பற்றி வினவிக் கொண்டிருந்தவர்கள்.
- கியாமத்தின் அலாமாத்துகள், அதற்கு முன்னர் உலகில் ஏற்படவிருக்கும் ஃபித்னா, ஃபஸாதுகள் பற்றி நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர்களிடமேயே அதிகம் கூறியுள்ளார்கள்.
- உஹதுடைய தினத்தில் இவர்களின் முன்னிலையிலேயே இவர்களின் தந்தை முஸ்லிம்களால் தவறுதலாக கொல்லப்பட அதனை இவர்கள் பெருந்தன்மையுடன் மன்னித்ததால் அழ்ழாஹ்வினால் பொருந்திக் கொள்ளப்பட்டார்கள்.
- ஃகந்தக்குடைய தினத்தில் வீரதீரமாக செயற்பட்டவர்கள். ஃகந்தக்குடைய இரவில் குளிருடனான கடுமையான காற்றும், பசியும் இருக்க நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆணைப்படி எதிரிகளைப் போய் வேவு பார்த்து சுவர்க்கத்தில் நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி அவர்களோடு இருப்பதற்கான உயர் பாக்கியத்தைப் பெற்றவர்கள்.
- உமர் இப்னு ஃகத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் தீர்மானங்கள் மேற்கொள்ளும்போது இவர்களது ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வார்கள்.
- உமர் இப்னு ஃகத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் மதாயினிற்கு கவர்னராக நியமிக்கப்பட்டவர்கள்.
- உஸ்மான் இப்னு அஃப்பான் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் காலத்தில், "குர்ஆனை மக்கள் பலவாறாக ஒதுகின்றனர்" என்று முறையிட்டு ஹஃப்ஸா பின்த் உமர் றழியழ்ழாஹு அன்ஹா அவர்களிடம் இருந்த குர்ஆனை பிரதி செய்யும்படி பணித்தவர்கள்.
- முனாஃபிக்கீன்களின் பெயர்களைக் கொண்ட பட்டியல் இவர்களிடம் மட்டுமே இருந்ததால் (நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வஃபாத்திற்குப் பிறகு) உமர் இப்னு ஃகத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள், ஹுஸைஃபா றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் கலந்துகொள்ளும் ஜனாஸாக்களில் மட்டுமே தானும் கலந்துகொண்டார்கள்.
ஹுதைஃபா இப்னு யமான்
ஸாஹிபுஸ் ஸிர்
றழியழ்ழாஹு அன்ஹு!
அஸீம் ழாஹிர்
கொழும்பு
Comments
Post a Comment