பிலால் இப்னு ரபாஹ் றழியழ்ழாஹு அன்ஹு
சுவர்க்கத்தில் செவியேற்ற செருப்புச் சத்தத்திற்குச் சொந்தக்காரர்
பிலால் இப்னு ரபாஹ் றழியழ்ழாஹு அன்ஹு
- ஹபஷா எனும் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த கருப்பினத்தவர்.
- "ஹபஷிகளில் முந்தியவர்" என்று நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புகழுரைத்தார்கள்.
- பதின்ம பருவத்திலேயே அடிமையானவர்.
- இஸ்லாத்தை ஏற்ற முதல் அடிமை.
- ஆரம்பமாக இஸ்லாத்தை வெளியாக்கிய ஏழு பேர்களில் ஒருவர்.
- உமையா இப்னு கலஃப் என்றவனின் அடிமையாக இருந்தார்கள். ஆடு, ஒட்டகம் மேய்ப்பது இவர்களின் பணி.
- இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக மூர்க்கத்தனமாக கொடுமை செய்யப்பட்டார்கள். ஆரம்பத்தில் மிரட்டப்பட, பேரம் பேசப்பட இவர்கள் ஒன்றுக்கும் பணியவில்லை. பிறகு,
* பட்டினியில் கிடத்தப்பட்டார்கள்.
* இரும்புக் கவசங்கள் அணிவிக்கப்பட்டார்கள்.
* பாலைவன சுடு மணலில் கிடத்தப்பட்டார்கள்.
* சூடான பாறைக் கற்கள் நெஞ்சின்மீது வைக்கப்பட்டார்கள்.
எவ்வளவுதான் கொடூரமாக வேதனைச் செய்யப்பட்டும் ஈமானில் கடுகளவேனும் அசையவில்லை. அதனால்,
* கழுத்தில் இறுக்கமாக கட்டப்பட்ட கயிறொன்றின் மூலம் சிறுவர்களால் இழுத்துச் செல்லப்பட்டார்கள்.
- இவர்கள் கடுமையாக வேதனைச் செய்யப்படுவதை பொறுக்க முடியாமல்
அபூபக்ர் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் இவர்களை விலைக்கு வாங்கி அடிமைத்தனத்திலிருந்து உரிமையிட்டார்கள்.
- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனே அண்டியிருந்தார்கள்.
- பத்ர் ஸஹாபி.
- இஸ்லாமிய வரலாற்றில் முதன்முதலில் அதான் சொல்லி தொழுகைக்கு அழைத்தவர்.
- "எங்களுடைய தலைவர்" என்று இவர்களை, உமர் இப்னு ஃகத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் அழைப்பார்கள்.
- "பிலால் இப்னு ரபாஹ் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களைக் கோபப்படுத்துவது அழ்ழாஹ்வை கோபப்படுத்துவதைப் போன்றது".
- ஃபத்ஹுடைய நாளில் நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் கஃபாவிற்குள் நுழைந்த மூவரில் ஒருவர்.
- ஃபத்ஹுடைய நாளில் கஃபாவின்மீதேறி அதான் சொன்னவர்.
- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வஃபாத்திற்குப் பிறகு ஷாமிற்கு போய்விட்டார்கள்.
- உமர் இப்னு ஃகத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் ஷாமில் அமவாஸ் என்ற கொலரா நோயினால் மரணித்தார்கள்.
பிலால் இப்னு ரபாஹ் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களுக்கு இந்தச் சிறப்புகளோடு மேலும் ஒரு பிரத்யேகமான சிறப்பு ஒன்றுள்ளது.
நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சுவர்க்கத்தில் பிலால் இப்னு ரபாஹ் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் காலணிச் சத்தத்தைக் கேட்டார்கள். அது தொடர்ப்பான ஹதீஸ் பின்வருமாறு:
"ஒரு ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களிடம் 'பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சுவர்க்கத்தில் கேட்டேன்' என்று நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள், 'இரவிலோ, பகலிலோ நான் வுழுச் செய்தால், எனக்கு சுத்தத்தைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட அந்தத் தொழுகையை தொழுது வருகிறேன். இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல்' என்று விடையளித்தார்கள்.
[அபூஹுரைரா றழியழ்ழாஹு அன்ஹு- ஸஹீஹ் புஃகாரி]
"யா றஸுலழ்ழாஹ்! நான் இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டுத்தான் அதான் சொல்லக்கூடியவனாக உள்ளேன். எனக்கு வுழு முறிவு ஏற்பட்டால் உடனடியாக வுழு செய்துவிடுவேன்"
[அஹ்மத்/ திர்மிதி]
பிலால் இப்னு ரபாஹ்
ஸமிஃத்த தஃப்ப நஃலய்க்க பைன யதய்ய ஃபில் ஜன்னா
றழியழ்ழாஹு அன்ஹு!
அஸீம் ழாஹிர்
கொழும்பு
Comments
Post a Comment