றஹ்மானின் அர்ஷயே நடுங்கச் செய்த ஸஃத் இப்னு முஆத் றழியழ்ழாஹு அன்ஹு
றஹ்மானின் அர்ஷயே நடுங்கச் செய்த
ஸஃத் இப்னு முஆத் றழியழ்ழாஹு அன்ஹு
- மதீனாவைச் சேர்ந்தவர்கள்.
- முஸ்அப் இப்னு உமைர் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் கைகளில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள்.
- பத்ர் ஸஹாபி.
- பத்ருடைய தினத்தில் அன்ஸாரிகளின் கொடியை ஏந்தியவர்கள்.
- ஃகந்தக்குடைய தினத்தில் இவர்களின் மேனியில்/ கை நரம்பினில் பாய்ச்சப்பட்ட அம்பினால் காயம் ஏற்பட்டு பின்னர் அது வெடித்து மௌத்தாகினார்கள்.
- "அழ்ழாஹ்வின்மீது சத்தியமாக! ஸஃத் இப்னு முஆத்திற்கு சுவர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் உலகில் உள்ள பட்டாடைகளைவிட உயர்ந்தவை"
[அனஸ் இப்னு மாலிக் றழியழ்ழாஹு அன்ஹு- ஸஹீஹ் புஃகாரி/ ஸஹீஹ் முஸ்லிம்]
- இவர்கள், பனூ குறைழாவினர்களுக்கு மத்தியில் தீர்ப்புச் சொல்ல வருகையில் நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "சிறந்தவர்/ தலைவர் வருகிறார்" என்று மக்களுக்குக் கூறி எழுந்து நின்று மரியாதை செய்யும்படிப் பணித்தார்கள்.
[அபூ ஸஈத் அல் ஃகுத்ரி றழியழ்ழாஹு அன்ஹு- ஸஹீஹ் புஃகாரி/ ஸஹீஹ் முஸ்லிம்]
- இவர்கள் பனூ குறைழாவினர்களுக்கு மத்தியில் சொல்லிய தீர்ப்பு "அழ்ழாஹ்வின் தீர்ப்புக்கு ஒப்பானது"
[அபூ ஸஈத் அல் ஃகுத்ரி றழியழ்ழாஹு அன்ஹு- ஸஹீஹ் புஃகாரி/ ஸஹீஹ் முஸ்லிம்]
- இவர்கள் பனூ குறைழாவினர்களுக்கு மத்தியில் தீர்ப்புச் சொல்லிய பிறகு, "அழ்ழாஹ்வின் பாதையில் போர் செய்வது ஏனைய அனைத்தையும்விட எனக்கு மிக விருப்பமானது. குறைஷிகளுடனான போர் ஏதேனும் மீதி இருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச் செய். நானும் உன் வழியில் போர் புரிவேன். போரை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டால் காயும் நிலையில் உள்ள எனது காயத்தை மீண்டும் இரத்தம் கொப்பளிக்கச் செய்! அதிலேயே எனக்கு மரணத்தைத் தந்து விடு!" என்று துஆக் கேட்க இவர்களது நெஞ்சிலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. பிறகு மௌத்தாகிவிட்டார்கள்.
[ஆயிஷா ஸித்தீக்கா றழியழ்ழாஹு அன்ஹா- ஸஹீஹ் புஃகாரி/ ஸஹீஹ் முஸ்லிம்]
- "ஸஃத் இப்னு முஆத் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் மௌத்தின் காரணமாக றஹ்மானின் அர்ஷ் நடுங்கியது"
[ஜாபிர் றழியழ்ழாஹு அன்ஹு- ஸஹீஹ் புஃகாரி/ ஸஹீஹ் முஸ்லிம்/ அனஸ் இப்னு மாலிக் றழியழ்ழாஹு அன்ஹு- ஸஹீஹ் முஸ்லிம்/ அஹ்மத்]
- "ஸஃத் இப்னு முஆத் மௌத்தாகிவிட்டார்கள் என்ற செய்தியினாலும் அன்னாரை வரவேற்பதற்காகவும் றஹ்மானின் அர்ஷ் நடுங்கியது. மலக்குமார்களே! நீங்களும் அன்னாரை வரவேற்கத் தயாராகுங்கள்" என்று ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மலக்குமார்களிடம் கூறினார்கள்.
[ஃபத்ஹுல் பாரி]
- இவர்களுடைய ஜனாஸா சுமப்பதற்கு இலேசாக இருக்க, முனாஃபிக்குகள், "பனூ குறைழாவினர்களுக்கு மத்தியில் இவர் தவறாகத் தீர்ப்பு வழங்கியதால்தான்" என்று நகைக்க நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "எழுபதாயிரம் மலக்குமார்கள் அவரை சுமந்து சென்றனர்" என்று பதிலளித்தார்கள்.
[அனஸ் இப்னு மாலிக் றழியழ்ழாஹு அன்ஹு- திர்மிதி/ ஹாகிம்]
- "கப்ருடைய நெருக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒருவர் இருப்பாரானால் அது ஸஃத் இப்னு முஆதாகத்தான் இருக்கும். ஆனால், கப்ர் ஸஃத் இப்னு முஆதையும் நெருக்கப் பார்த்தது. பிறகு நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழ்ழாஹ்வின்மீது தஸ்பீஹ் மற்றும் தக்பீர் சொல்ல கப்ர் விலகிவிட்டது"
[ஜாபிர் றழியழ்ழாஹு அன்ஹு- அஹ்மத்/ ஹாகிம்]
ஸஃத் இப்னு முஆத்
இஹ்தஸ்ஸ அர்ஷுர் ரஹ்மான் லிமவ்தி ஸஃதிப்னி முஆத்
றழியழ்ழாஹு அன்ஹு!
அஸீம் ழாஹிர்
கொழும்பு
Comments
Post a Comment