தந்தையின் துஆவால் பாக்கியத்தை பெற்ற சஹாபி

 

தந்தையின் துஆவால் பாக்கியத்தை பெற்ற

ஸஈத் இப்னு ஸைத் றழியழ்ழாஹு அன்ஹு


- தாருல் அர்கமில் நுழைவதற்கு முன்னரே இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள்.

- இவரது தந்தை ஸைத் இப்னு அமர் என்பவர் அழ்ழாஹ்வை ஈமான் கொண்டவர். நபித்துவத்திற்குப் பிறகு நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காண வந்துகொண்டிருந்தபோது வழியில் கொலை செய்யப்பட்டார். இறுதி நொடியில் அவர், "யா அழ்ழாஹ்! எனக்குத்தான் இஸ்லாத்தின் பாக்கியம் கிடைக்கவில்லை. எனது மகனிற்காவது அதனை வழங்கிவிடு!" என்று கூறியவாறு மரணித்தார்.

- சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட பத்து பேர்களில் ஒருவர்.

- உமர் இப்னு ஃகத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் சகோதரி ஃபாத்திமா பின்த் ஃகத்தாபின் கணவர்.

- உமர் இப்னு ஃகத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் இவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

- மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர்கள்.

- பத்ர் தவிர ஏனைய அனைத்து யுத்தங்களிலும் கலந்து கொண்டவர்கள். 

- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தன்னுடைய பத்ர் கனீமத் பங்கால் இவர்களுக்கு வழங்கினார்கள்.

- மதீனா ஆளுனர் மர்வான் பின் அல் ஹகமின் காலத்தில் ஒரு பெண் இவர்களுக்கு எதிராக பொய் வழக்கு தாக்கல் செய்தாள். அவளின் முடிவு என்னாயிற்று என்பதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.


"ஸஈத் இப்னு ஸைத் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் தமது நிலத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டார்" என அர்வா பின்த் உவைஸ் (அல்லது உனைஸ்) என்ற பெண் குற்றம் சாட்டினார். (அப்போதைய மதீனாவின் ஆளுனர்) மர்வான் பின் அல் ஹகமிடம் ஸஈத் இப்னு ஸைத் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக அவர் வழக்குத் தொடுத்தார். 


(விசாரணையின்போது) ஸஈத் இப்னு ஸைத் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள், "நான் அழ்ழாஹ்வின் தூதர் ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து (ஒரு ஹதீஸை) செவியுற்ற பிறகும் அவளது நிலத்தில் ஒரு பகுதியை அபகரிப்பேனா?" என்று கேட்டார்கள்.


அதற்கு மர்வான் "அழ்ழாஹ்வின் தூதர் ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நீங்கள் என்ன செவியுற்றீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு ஸஈத் இப்னு ஸைத் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள், "யார் ஒரு சாண் நிலத்தை அநியாயமாகக் கைப்பற்றிக்கொள்கிறாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும் என்று அழ்ழாஹ்வின் தூதர் ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். அதற்கு மர்வான், "இதற்குப் பின் உங்களிடம் நான் ஆதாரம் கேட்கமாட்டேன்" என்றார்கள்.


அப்போது ஸஈத் இப்னு ஸைத் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் "இறைவா! இவள் பொய் சொல்லியிருந்தால் அவளது பார்வையைப் பறித்துவிடு. அந்த நிலத்திலேயே அவளைக் கொன்றுவிடு" என்று பிரார்த்தித்தார்கள்.

பிறகு பார்வை பறிபோனவளாகவே அவள் இறந்தாள். அவள் தனது நிலத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு குழியில் (தவறி) விழுந்து மாண்டுபோனாள்.


[உர்வா பின் அஸ்ஸுபைர் றஹிமஹுழ்ழாஹ்- ஸஹீஹ் முஸ்லிம்]


ஸஈத் இப்னு ஸைத்

முஸ்தஜாபுத் துஆ

றழியழ்ழாஹு அன்ஹு!


அஸீம் ழாஹிர்

கொழும்பு

Comments

Popular posts from this blog

ஹுதைஃபா இப்னு யமான் றழியழ்ழாஹு அன்ஹு (ஸாஹிபுஸ் ஸிர்)

ஸைத் இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு