Abdullah Ibnu Mas'ood (RA) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு
இரண்டு செருப்புகளுக்குச் சொந்தக்காரர்
அப்துழ்ழாஹ்இப்னு மஸ்ஊத் றழியழ்ழாஹு அன்ஹு
- ஆரம்ப காலகட்டத்திலேயே ஆறாவதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.
- உடல் மெலிந்தவர்கள், மெல்லிய கெண்டைக் கால்களை உடையவர்கள். ஸஹாபாக்கள் சிரித்தபோது, "கியாமத்தில், மீஸான் தராசில் இரண்டு கால்களும் உஹத் மலையைவிட பாரமாக இருக்கும்" என்ற நன்மாராயம் கூறப்பட்டவர்கள்.
- கியாமத்தில் அழ்ழாஹ்விடத்தில் உதவியால் மிக நெருக்கமானவர்கள்.
- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருங்கிய பணியாளர்களில் ஒருவர். இவர்களது பணிகள் சில:
* நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எழுப்புவது.
* நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிக்கையில் திரையிடுவது.
* நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி அவர்களின் பிரத்யேகமான பொருட்களான செருப்பு, மிஸ்வாக், தலையணை, தண்ணீர் குவளைகளுக்கு பொறுப்பாக இருப்பது.
- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனேயே காலத்தைக் கழித்தவர்கள். அதனால் இவரும் நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டாரில் ஒருவர் என சில ஸஹாபாக்கள் எண்ணியிருந்தனர்.
- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனேயே நிழலாகப் பயணித்தவர்கள்.
- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உருவ அமைப்பிலும், நடத்தையிலும், அழகான போங்காலும் அப்துழ்ழாஹ் இப்னு மஸ்ஊத் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களே மிக நெருக்கமானவர்கள்.
- எளிமையானவர்கள், ஆனால் தைரியமும், வீரமும் கொண்டவர்கள்.
- குறைஷிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கஃபா அருகேச் சென்று முதன்முதலாக பகிரங்கமாக குர்ஆனை (ஸுறா அர் ரஹ்மான்) ஓதியவர்கள்.
- ஹபஷா, மதீனா ஆகிய இரு ஹிஜ்ரத்களிலும் பங்கேற்றவர்கள்.
- பத்ர் ஸஹாபி.
- பத்ருடைய தினத்தில், "இந்த உம்மத்தின் ஃபிர்அவுன்" அபூஜஹ்லின் தலையை கொய்தவர்கள்.
- குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹ் என மார்க்க விளக்கங்கள் வழங்கப்பட்டவர்கள்.
- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து எழுபது ஸுறாக்களை நேரடியாகக் கற்றவர்கள்.
- "யார் குர்ஆன் இறக்கிவைக்கப்பட்டது போன்று குர்ஆனை ஓத விரும்புவாரோ, அவர் அப்துழ்ழாஹ் இப்னு மஸ்ஊதின் கிராஅத்தின் பிரகாரம் ஓதட்டும்" என்ற நன்மாராயம் பெற்றவர்கள்.
- தொழுகையில் ஸுறா நிஸாவை ஓதிய பிறகு இவர்கள் கேட்ட துஆக்களும் கபூலாக்கப்பட்டன.
- குர்ஆனின் ஆயத்கள், மாற்றப்பட்ட ஆயத்கள், எங்கு, எப்போது, யாரின் விடயத்தில் இறக்கப்பட்டன என்ற சகல விடயங்களையும் அறிந்தவர்கள்.
- "குர்ஆனை நால்வரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்" என்ற ஹதீஸில் குறிப்பிடப்பட்ட நால்வருள் ஒருவர்.
-
وَلَا تَطْرُدِ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ
(நபியே!) தங்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் விரட்டி விடாதீர்கள்!
என்ற ஸுறா அன்ஆமின் ஆயத், ஆறு ஸஹாபாக்கள் விடயத்தில் இறக்கப்பட்டது. அதில் அப்துழ்ழாஹ் இப்னு மஸ்ஊத் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களும் ஒருவர்.
- "அறிவு ஞானமூட்டப்பட்ட சிறுவன்" என்று நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களாலும், "மார்க்க விளக்கத்தினால் நிரப்பப்பட்ட பாத்திரம்" என்று உமர் இப்னு ஃகத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களாலும் போற்றப்பட்டவர்கள்.
- உமர் இப்னு ஃகத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் இவர்களை முஅல்லிமாக, காழியாக, பைத்துல்மாலிற்கு பொறுப்பாளராக கூஃபாவிற்கு அனுப்பிவைத்தார்கள்.
- "ஒவ்வொரு நாள் மஃறிபிற்குப் பிறகு ஸுறா வாக்கிஆவை ஓதிவருபவருக்கு வறுமை அண்டாது" என்ற ஹதீஸை அறிவித்து அதனில் உறுதியாக நம்பிக்கைவைத்து அதனை, தனது மௌத்திற்குப் பிறகு தனது பெண்பிள்ளைகளுக்கு நியமமாக ஓதிவருமாறு பணித்தவர்கள்.
அப்துழ்ழாஹ் இப்னு மஸ்ஊத்
ஸாஹிபு நஃலயின்
ஸாஹிபு ஸிவாகின்
ஸாஹிபு விஸாதா
ஸாஹிபு மித்ஹரா
றழியழ்ழாஹு அன்ஹு!
அஸீம் ழாஹிர்
Comments
Post a Comment