பத்ர் தரும் படிப்பினை - மஷுரா
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyD08SKPH0dERjIVBOE-3OENA5wAMIz8dk0DTo6TppFOE50caiQTruZpGKHVTWN6O4DnvrrMY_rJ_7KgD444yjpngx73EJZHXQ2YN32a7H9e31_FY6kDyHMaz1EDsEr4n5mDXnP8WyGYMJQhTmYJuTxeaMWDZZHESSdQOK_iDKYIijX0xB19Eh0e-A/s320/FB_IMG_1650476098356.jpg)
பத்ர் தரும் படிப்பினை 2 மஷுரா மார்க்க விவகாரங்களில் ஆலிம்களுடனும், உலக விவகாரங்களில் குறித்த துறையில் ஆற்றல் உள்ளவர்களிடமும் ஆலோசனைச் செய்வது அழ்ழாஹ்வின் உதவியும், உலகியல் விவகாரங்களில் நன்மை நடப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் . நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ர் யுத்தத்திற்கு முன்னர் ஸஹாபாக்களிடம் ஆலோசனைக் கேட்டார்கள். தாம் விரும்பும் முடிவை சில ஸஹாபாக்கள் முன் வைத்தும்கூட அவர்கள் திடீர் முடிவு செய்யாது அன்ஸாரிகளின் முடிவை அறியும் ஆர்வத்தில் தொடர்ந்தும் ஆலோசனைச் செய்தார்கள். அவர்களின் ஆலோசனையும் சாதகமாக அமைந்த பின்னரே யுத்தம் செய்யும் முடிவை எடுத்தார்கள். இது ஆலோசனை செய்வதின் அவசியத்தை உணர்த்துகின்றது. மேலும் பத்ர் களத்தில் நடந்த இன்னொரு சம்பவமும் மஷுராவின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘பத்ர்’ களம் சென்று மதீனா பகுதிக்கு நேராக இருக்கும் முதலாவது கிணற்றுக்கருகில் தமது கூடாரங்களை அமைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். அப்போது ஹுபாப் இப்னுல் முன்தீர் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள், ‘அழ்ழாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நாம் கூடாரமிட வேண்டு...