திஹ்யதுல் கல்பி றழியழ்ழாஹு அன்ஹு
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqWP6h_y_y8AQHg-fxNfZpAwuUqFtoeLSZ2jUUIVQbtYoxg4PmZQrG3XlJNZCL3i8en10bIUHFde__cJldmMW1ViTPO2vMdtzsUQdvNbjqwKZ-E498Sc9fDXT2vp-SVjhyUT9c-t-3ic4/s320/IMG-20210725-WA0026.jpg)
திஹ்யதுல் கல்பி றழியழ்ழாஹு அன்ஹு - மதீனாவைச் சேர்ந்தவர்கள். - அழகான தோற்றத்தைக் கொண்டவராக இருந்ததால் அழகுக்கு உதாரணம் காட்டப்பட்டவர்கள். - கைஸர் மன்னருக்கு தூதுவராக அனுப்பி வைக்கப்பட்டவர்கள். - டமாஸ்கஸ்ஸில் வசித்து வந்தார்கள். - நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உம்மு ஸலமா றழியழ்ழாஹு அன்ஹா அவர்கள் அமர்ந்திருந்தபோது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு மனிதரின் தோற்றத்தில் வந்தார்கள். மேலும், நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஸலமா றழியழ்ழாஹு அன்ஹா அவர்களிடம், 'இவர் யார்?' என்று கேட்க, அவர்கள், 'இது திஹ்யா' என்று பதிலளித்தார்கள். அப்போது அது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தாம்' என்று உம்மு ஸலமா றழியழ்ழாஹு அன்ஹா அவர்களுக்கு தெரியாது. பின்னர் உம்மு ஸலமா றழியழ்ழாஹு அன்ஹா அவர்கள், 'அழ்ழாஹ்வின் மீதாணையாக! நான், நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னதாகத் தம் உரையில் குறிப்பிட்டதைச் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா கல்பீ அவர்கள் தா...