பூமி விழுங்கிய ஃகுபைப் இப்னு அதீ, ஆண் தேனீக்கள் பாதுகாத்த ஆஸிம் இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹுமா

Click Here & Join lovislam Telegram Group பூமி விழுங்கிய ஃகுபைப் இப்னு அதீ ஆண் தேனீக்கள் பாதுகாத்த ஆஸிம் இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹுமா - இருவரும் மதீனாவைச் சேர்ந்தவர்கள் - இருவரும் "ரஜீஃ" சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள். ஹிஜ்ரி 4, ஸஃபர் மாதம் அழல் மற்றும் காரா வமிசத்தைச் சேர்ந்த ஒரு கூட்டம் நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து தங்களில் பலர் இஸ்லாத்தைத் தழுவ விரும்புகின்றனர். அவர்களுக்கு இஸ்லாமையும், குர்ஆனையும் கற்றுத்தர தங்களுடன் சிலரை அனுப்புமாறு கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று பத்து நபர்களை நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பினார்கள். குழுவுக்குத் தலைவாரக ஆஸிம் இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் இருந்தார்கள். இவர்களை அழைத்துக் கொண்டு "ரஜீஃ" என்ற இடத்தை அம்மக்கள் அடைந்தனர். இவ்விடம் ராபிக் மற்றும் ஜித்தாவிற்கு மத்தியில் ஹிஜாஸ் பகுதிக்கு அருகில் ஹுதைல் வமிசத்திற்குச் சொந்தமான நீர் நிலையாகும். இங்கு வந்தவுடன் லஹ்யான் கிளையினரை இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினர். லஹ்யான் கிளையைச் சோந்த நூறு அம்பெறியும் வீரர்கள் காலடி அடையாளங்கள...